குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கரை பௌத்த பூமியாக்க நடவடிக்கை

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்கு, தொல்பொருள்

திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குறித்த எழுத்து மூல அறிவிப்பில் கோரப்பட்டுள்ளது.

குறித்த 400 ஏக்கர் காணியில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்துக்குரிய தமிழ் மக்களுடையது என்பதுடன், மிகுதிக் காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில்

உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. எதிர்வரும் முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில், 400 ஏக்கர் காணியைத் தொல்பொருள் திணைக்

களம் கோரிய விடயம் குறித்து ஆராயப்படவுள்ளது.

அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *