வடக்கில் நேற்று 23 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி

செய்யப்பட்டது. இதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் கொரோனா நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 600 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே, 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில்

சேர்க்கப்பட்ட யாழ்.நகர் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்குகொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்

றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கு

கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.யாழ்.நகரிலுள்ள மரக்கறிச் சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம்

நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 9 பேருக்கு

தொற்று கண்டறியப்பட்டது.கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் தொற்றாளர்களாக

அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் காரைநகர் இ.போ.ச.பேருந்து சாலை பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள்.மன்னாரில் நகரைச் சேர்ந்த மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்

தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

உறுதிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தோற்று

கண்டறியப்பட்டது என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *