பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், பொட்ஸ்வானா, கொலம்பியா, தென் ஆபிரிக்கா, தன்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படுவதாகவும், இந்தத் தடை 23ஆம் திகதி (நாளை) முதல் அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L