இலங்கை -பங்களாதேஷ் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும், பங்களா தேஷுக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் நேற்று சனிக்கிழமை டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம், முதலீடு,சந்தை, தொழில்நுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜ தந்திர உறவின் 50ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் உறவுகளைப் பலப்படுத்துவது

தொடர்பிலான யோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தீவிரவாதம் மற்றும் மனிதக் கடத்தல் வியாபாரம் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்கத் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. இரு தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதன் பின்னர் இரு நாட்டுப் பிரதமர்களின் முன்னிலையில் இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்தல், விவசாயத்துறை,திறன் அபிவிருத்தி பரிமாற்றல், சுகாதார தாதிகள் சேவைப் பரிமாற்றம், அனைத் துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பரிமாற்ற செயல்திட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *