இலவச கல்வித் துறையில் தற்போது அமுலிலுள்ள பாடத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கும், தொழில் வாய்ப்
புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்புடையதல்ல.
புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் நவீன உலகிற்குப் பொருந்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மாத்தறை ராஹுல மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்த பின்னர் கல்வியலாளர்களுடன் கலந்துரையாடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:இலவசக் கல்வியைக் கற்கும் மாணவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போராட்டம் நிலவுகிறது.
பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் வெளியேறிய பின்னர் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் அரச தொழில் துறையைப்பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்
கொண்டு சிக்கல் நிலை காணப்படுகிறது.
தற்போது அமுலிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயதானங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், தொழில் வாய்ப்புகளை இலகுவில்பெற்றுக்கொள்வதற்கும் சாதகமாக அமையவில்லை. மாறாக சிக்கல் தன்மையை மாத்திரம் ஏற்படுத்தியுள்ளன.
பாடசாலை பாடத்திட்டங்கள் மட்டுமல்ல பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் கூட தற்போதைய சவால் மிக்க உலகில் இலகுவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமாக அமையவில்லை.புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஊடாக பாடத்திட்டத்தை புதுப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்