கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துள்ளது.
01 . யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதான பெண் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமை காரணமாக 2021 மார்ச் மாதம் 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
- கம்பஹா பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல உறுப்புகள் செயலிழந்தமை, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் காரணமாக 2021 மார்ச் மாதம் 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
03. கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சிறுநீரக பாதிப்பு மற்றும் ஈரல் நோய் காரணமாக 2021 மார்ச் மாதம் 08 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.
- பமுனுகம பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் காரணமாக 2021 மார்ச் மாதம் 10ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
- களுத்துறை வட பகுதியைச் சேர்ந்த 94 வயதான பெண் ஒருவர், மொரட்டுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று, இரத்தம் விஷமானமை, மற்றும் நீரிழிவு நோய் காரணமாக 2021 மார்ச் மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.