யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்
தப்பட்டது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற 29 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கிளிநொச்சி மற்றும் பதுளையைச் சேர்ந்தவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது.
இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேரின்மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்எவருக்கும்தொற்றுகண்டறியப்படவில்லை என மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.