கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கனடாவில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கொவிஷீல்ட் ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவசரகாலத் தேவைக்காக தடுப்பூசிகளைப் போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தடுப்பூசிகள் கோரும் மற்ற நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலைதீவுகள், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர ஜமைக்கா உள்ளிட்ட தொலைதூரத்தில் அமைந்த ஆபிரிக்க நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் கனடாவுக்கும்
கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக இந்நாட்டிலுள்ள இந்து அமைப்புகள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கிரேட்டர் டொரண்டோ பகுதியிலுள்ள வீதியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கனடா -இந்தியா நட்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.