கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் சடலம் நேற்று கரை ஒதுங்கியுள்ளது. குளக்கட்டை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த பெண் 37 வயதுடையவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்பட்டன.
குறித்த பெண்ணின் அருகில் இருந்த பை ஒன்றில் காணப்பட்ட தேசிய அடையாள அட்டையில் ஆறுமுகம் திலகேஸ்வரி, உருத்திரபுரம் எனும் முகவரி காணப்பட்டுள்ளது. 1984இல் பிறந்த பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன