இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் காலவரையறை அற்ற நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ரொரன்ரோ, ஒட்டாவா, மொன்றியல் ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
சர்வதேசமே!அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் இலங்கை அரசினை கொண்டுவர வேண்டுகிறோம்
- ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறோம்!
- ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டுகிறோம்…உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.