உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்
இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், முன்னைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாகவே 2019 இல் மீண்டும் குண்டுகள் வெடித்தன எனக் குறிப்பிட்டுள்ளார்.2019 செப்டம்பரில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு யார் குற்றவாளி என்பதை தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் எனக்கு அறிக்கை கிடைத்தது, பாதுகாப்பு விவகாரங்களில் முன்னைய அரசாங்கம் போதியஅக்கறையின்றிகாணப்பட்டமையும்,திறமையின்மையுமே முக்கியமான இரு காரணங்கள் என ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தாக்குதலிற்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்கள் தாங்கள் தற்போது அவ்வாறு இருக்கவில்லை எனத் தெரிவிமுயல்கின்றனர் எனக் கூறியுள்ள ஜனாதிபதி 2015 இல் காணப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை முன்னைய அரசாங்கம் பின்பற்றத் தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு தற்போதைய அரசாங்கத்தையும் குற்றம் சாட்டவேண்டும் எனத் தெரிவிக்கப்படுவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
தாக்குதலில் தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்