மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் – 18 பேர் பலி

ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியன்மார் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

பல நகரங்களில் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோக்தை மேற்கொண்டுள்ளனர்

இது மிகவும் பயங்கரமானது. இது படுகொலை. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நிலை என செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோனிவா என்ற நகரிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நகரில் ஒரு பெண் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் பலர் சுயநினைவற்ற நிலையில் காணப்படுகின்றனர் என பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

யங்கூனில் பாதுகாப்புப் படையினர் தானியங்கி துப்பாக்கிகளால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகத்தை நான் கேட்டேன். நான் நிலத்தில் விழுந்து கிடந்தேன். அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டார்கள். இருவர் கொல்லப்பட்டதை நான் நேரில் பார்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்மன்டலாயில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *