யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனதெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 255 பேரின் மாதிரிகள்பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்றில்லை என அறிக்கையிடப்பட்டது.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 126 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவர்களில் மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.யாழ்ப்பாணம்சிறைச்சாலையிலிருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு காரைநகரிலுள்ள அவரதுவீட்டுக்குத்திரும்பியஒருவர்சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மெலிஞ்சிமுனையைச்சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர் பூநகரி வலைப்பாடு பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச்
சென்று வந்துள்ளார். இவர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்றார்.