கொவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையிலுள்ள ஊரடங்கு தொடர்பான தகவல்களைப் புதுப்பிப்பது தொடர்பாக புதனன்று ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பை கியூபெக் மாகாண முதல்வர் பிராங்கொயிஸ் லெகால்ட்ஏற்பாடுசெய்தார்.அதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிராங்கொயிஸ் லெகால்ட் கேபிடல்-நேஷனல், சாடியர்-அப்பலாச்சஸ், மொரிசி, எஸ்ட்ரி மற்றும் சென்டர்-டு-கியூபெக் ஆகிய பிராந்தியங்கள் மார்ச் 8 ஆம் திகதி முதல் ஒரேஞ்ச் மண்டலத்துக்கு மாற்றம் பெறவுள்ளதாக அறிவித்தார்.
அந்தப் பிராந்தியங்களில், உணவகங்கள், உடல் பயிற்சிக் கூடங்கள் மற்றும் உட்புற விளையாட்டு நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கும். அதேவேளை ஏற்கனவே அமுலிலுள்ள இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு இரவு 9:30 மணிக்குப் பின்னுக்குத் தள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், மொன்றியல், லாவல், மாண்டெரகி, லானாடியர் மற்றும் லாரன்டைட்ஸ் பகுதிகள் தொடர்ந்தும் சிவப்பு மண்டலத்தில் இருக்கும். மேலும் சிவப்பு எச்சரிக்கை அமுலிலுள்ள பிராந்தியங்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்து 89 ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10 ஆயிரத்து 426இற்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன