சிரியாவில் இரசாயனத் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் சார்பில் சட்டத்தரணிகள் இரசாயன தாக்குதலுடன் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு எதிராக பிரான்சில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.பாரிசை தளமாகக் கொண்ட ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அமைப்பு வேறு இரு அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதையும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவதையும் காண்பது மிக முக்கியமானது என ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.பிரான்சில் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் வாழ்ந்துவருவதுடன் அதன் நீதிபதிகளுக்கு உலகின் எந்தப் பகுதியிலாவது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என விசாரணை செய்வதற்கான ஆணையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
கடந்த வருடம் ஜேர்மனியில் இதேபோன்ற வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரியா தொடர்பான சர்வதேச தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான முயற்சிகளை பாதுகாப்பு சபையில் சீனாவும் ரஷ்யாவும் தடுத்து வருகின்றன