இ ந் தி யா வி ன் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணி க ள் க ப் ப ல் சேவைக்கான புரிந்
துணர்வு ஒப்பந்தம் இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் (Sagarmala Development Company Ltd), இந்ஸ்ரீ பயணிகள் கப்பல் தனியார் நிறவனத்திற்கும் ((INDSRIFERRY SERVICES PVT LTD)) இடையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இதில்
சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர்
திலீப்குமார் குப்தாவும், இந்ஸ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் சோ. நிரஞ்சன்நந்தகோபனும் கைச்சாத்திட்டனர்.இரு நாடுகளுக்கிடையிலும் பயணிகள் போக்குவரத்து சுமுகமாகத் தொடங்கிய
தும் இந்தச் சேவையை விரைந்து ஆரம்பிக்கவிருப்பதாக நிரஞ்சன் தெரிவித்தார்