மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் இலங்கையில் சில வகையான பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக், இதற்கமைய வாசனைத் திரவியங்கள் மற்றும் நீராகார பொருட்கள் அடைக்கப்பட்ட சிறு பொலித்தீன் பக்கெட், காற்று நிரப் பப்பட்ட பிளாஸ்திக் உற்பத்தியிலான விளையாட்டு பொருட்கள், மைக் ரோன் 20ற்கு குறைவான லஞ்சீட் (உணவுப் பொதியுறை) ஆகிய உற்பத் திகளை மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்