முல்லையின் கடற்றொழில் அபிவிருத்திக்கு 10 கோடி ரூபா செலவிடப்படும் அமைச்சர் டக்ளஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடு
களை மேற்கொள்வற்கு, சுமார் 10 கோடி ரூபாவைப் பயன்படுத்த
முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்
றொழில் அமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புகளையும்
சந்தித்து மாவட்டத்தின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இந்நிலையில், கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் கடந்த
சனிக்கிழமை நடத்திய கலந்துரையாடலிலேயே இந்த விடயத்தைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –
கடற்றொழிலாளர்களுக்குக் கெளரவமான வாழ்கைத் தரத்தை ஏற்ப
டுத்துவதற்கு நிறைவான வருமான மார்க்கங்களை அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக கடற்றொழில் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற மீன்பிடிச் செயற்பாடுகளை சட்ட விதிமுறைகளுக்கு அமைய
ஒழுங்குபடுத்துவதுடன், அதிகளவான வருமானத்தைத் தரக்கூடிய
தொழில் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கடற்றொழில் சமூகத்
தினருக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டுவருகின்றன.வடக்கு – கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான தரமான பொருளாதார
கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முன்
வருமாறு புலம்பெயர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலை
யில், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில்சார் அபிருத்திச் செயற்
பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடியவாறு சுமார் 10 கோடி ரூபாவை கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்
டுள்ளது.
எனவே, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடந்த காலத்தைப்
போன்று இல்லாமல் சரியான தரப்புகளை இனங்கண்டு செயற்படு
வார்களாயின், குறித்த தனியார் பங்களிப்புகளையும் அதேபோன்று
அரசாங்க திட்டங்களையும் ஒருமுகப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில்
பாரிய கடற்றொழில் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *