சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித, எரிசக்தி அமைச்சரின் கருத்துகள் இதனை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் கடன்களைப் பெற்றுக் கொள்ளத் தவறியமை காரணமாக எதிர்காலத்தில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வருட காலத்துக்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுவதாக எரிசக்தி அமைச்சர் கூறியிருந்தாலும் அதனை அரசாங்கம் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களைப் பெறவுள்ளதாக அமைச்சர் கூறியிருந்தாலும் நிதியமைச்சர் இந்தியாவிடமிருந்து எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை நாடு பெறாவிட்டால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
———————–
Reported by : Sisil.L