இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் போது புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், புவியின் வெப்ப நிலையை 1.5 பாகையாக செல்ஷியஸ் அளவுக்கு குறைக்க ‘ஜி – 20’ மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2015-ல் நடந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் புவியின் தட்பவெப்ப அளவை 2 பாகை செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதை 1.5 பாகை செல்சியஸ் அளவில் வைத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L