உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பு பேராயா் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று ஆலயங்கள், வீடுகள், வணிக வளாகங்கள், பணியிடங்களில் கறுப்புக்கொடி ஏற்றுமாறு நாட்டின் அனைத்துப் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய நீர்கொழும்பு பகுதியிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிராக ஒரு கூட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் அனுப்பப்பட்ட கடிதத்துக்குப் பதிலளிக்குமாறும் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் போராட்டக்கார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் நூர்தீன் முகமது ஷாஹீத் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுபைர்தீன் ஆகியோர் இன்றைய கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
——————
Reported by : Sisil.L