அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி ஆட்சியைக் கவிழ்க்கும் குறுகிய நோக்கத்தின் அடிப்படையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொது
மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாணந்துறைப் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் தற்போது உருவாகியுள்ள போராட்ட அலையானது, மக்களுக்கான நலன்புரி விடயங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான துஷ்ட நடவடிக்
கையாகும்.
போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஜனநாயக உரிமை அதனை முன்னெடுப்பவர்களுக்கு இருப்பதால் இது வரை காலமும் பொலிஸார் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாள ரிடமிருந்து எமக்கு தெளிவானதொரு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இதற்கமையவே பொலிஸார் சென்று அன்று போராட்டத்தை நிறுத்தினர்.
பொலிஸாரின் தேவைக்காக அவர்களை தனிமைப்படுத்தலுக்குக் கொண்டு செல்லவில்லை. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உத்தியோகபூர்வமாக முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என்றார்.
———————–
Reported by : Sisil.L