மறவன்புலவு மக்களுக்கு நிவாரணப் பொதிகள் விநியோகம்

கொரோனா தொற்று தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்மராட்சி – மறவன்புலவு கிழக்கு கிராம மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

அமரர் நமசிவாயம் வல்லிபுரநாதனின் ஓராண்டு நினைவாக அவரின் குடும்பத்தவர்கள் இந்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். அரிசி, மா, சீனி, பருப்பு, தேயிலை, சவர்க்காரம், சலவைத்தூள் உள்ளடங்கிய ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான நூறு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

மறவன்புலவு பொதுநோக்கு மண்டபம் முன்றிலில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜபக்ஷ, 12 ஆவது படைப்பிரிவின் அதிகாரி  லெப்டினன்ட் உதயங்க, அமரர் நமசிவாயம் வல்லிபுரநாதனின் குடும்பத்தவர்கள் பங்கேற்றனர்.    
—————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *