வடக்கு மாகாணத்தில் நேற்று 86 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.இதில் 80 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொற்றாளர்களில் இருவர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் 276 பேரின் மாதிரிகளும், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 604 பேரின் மாதிரிகளும் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டன.யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட 59 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி,சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு வயது இரு ஆண் குழந்தைகள் உட்பட 4, 8, 9 மற்றும் 16 வயது களையுடைய நான்கு சிறுவர்கள் உட்பட 27 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.இதேபோன்று, உடுவிலில் 17 பேரும், யாழ். மாநகரில் 7 பேரும், கரவெட்டியில் 8 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, நல்லூரில் 5 பேர், சாவகச்சேரி, காரைநகரில் தலா ஒருவரும், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 7 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 3 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் 3 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், திருநெல்
வேலி நொதேர்ன் தனியார் வைத்தியசாலையில் ஒருவர் என 21 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
தவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தலா ஒருவர் என வடக்கு மாகாணத்தில் நேற்று 86 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
———————
Reported by : Sisil.L