71 கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி ஓய்வு

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட ஆபிரிக்க எலி மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆபிரிக்க எலி பயிற்சி பெற்றிருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, உருவத்தில் சிறிதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றி, கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த ஆபிரிக்க ராட்சத எலி ‘மகவா’ தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றது. 


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *