யாழில் 39 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த சிறார்கள் பத்துப் பேர் உட்பட 39 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் கொரோனா ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டபி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர் , பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர் (06, 13 வயதுகளையுடைய சிறுமிகள் இருவர், 07 வயதுடைய சிறுவனும் உள்ளடக்கம்), சாவகச்சேரி சுகாதார வைத்திய அதி
காரி பிரிவில் 05 பேர் (08 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடக்கம்),வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர் தொற்றாளர்களாக
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *