கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் சுமார் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி ஆகியன நேற்று இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டன.
கம்பஹா, கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் பதிவான நிலையில் இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு மக்கள் தடுப்பூசி போட வந்ததால் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. மேலும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக கடுவெல, கம்பஹா மற்றும் கந்தானை ஆகிய இடங்களில் மோதல்களும் ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார்.
மேலும் அஸ்ட்ரா ஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை நேற்று 10,189 பேருக்கு வழங்கப்பட்டது.இதையடுத்து கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையைப் பெற்ற இலங்கையரின் மொத்த எண்ணிக்கை 231,557ஆகும்.
Reported by : Sisil.L