ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்கும் பணி இன்று மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இந்த வாரத்துக்குள் இக்கொடுப்பனவை விரைவாக வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாக இல்லாதிருப்பினும் 10ஆயிரம் ரூபா மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கப்படும். இது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்ட பின் அவர்களால் 5 ஆயிரம் ரூபாவைப் பெற முடியாது, நடமாடும் வாகனங்களிலிருந்து பொருட்களை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றார்.
——————
Reported by : Sisil.L