ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100 இற்கும் அதிகமான
தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்
என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியின் வடக்கு ரைன்- வெஸ்ட்பாலியா(North Rhine-Westphalia) பகுதியில் 100இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள
நாடு கடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Dusseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் இன்றும் நாளை திங்கட்கிழமையும் ஆர்ப்
பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் தெளிவான அறிக்கையின் பின்னரும் இவ்வாறு நாடு கடத்துவதற்கான
திட்டத்தை மனிதாபிமான பார்வையில் இருந்து புரிந்துகொள்ள முடியாததாக உள்ளதாக ஜேர்மனியிலிருந்து வெளி
யாகும் ANF NEWS செய்தி வெளியிட்டுள்
ளது.
இதேவேளை, தஞ்சம் கோருவோர் ஜேர்மனியில் தங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர் எனவும் , தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்
கள் தமது பதிவுகளை மேற்கொள்ளச் சென்றபோது கைது செய்யப்பட்டனர் எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜேர்மனியின் இந்தச் செயற்பாடு, அங்குள்ள தமிழ் சமூகம் மற்றும் பல்வேறு நாடுகளின் புலம்பெயர் தமிழர்களிடையே அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Reported by : Sisil.L