100 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் சுமார் 100 வரையிலான தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜேர்மனியின் டுசில்டோவ் சர்வதேச விமான நிலை

யத்துக்கு நேற்று பகல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இரகசியமாகக் கொண்டுவரப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவுக்கு மேல் அவர்களை

அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான

ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்

பதாக அங்கிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தது.

கடந்த சில வாரங்களாக ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் கைது

செய்யப்பட்ட புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இரகசிய இடங்களில் நாடு

கடத்தப்படுவதற்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

நேற்றைய தினம் இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள்

வெளியானதையடுத்து, மனித உரிமை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும்

அவர்களை நாடு கடத்த வேண்டாம் என வலியுறுத்தி வந்தன. ஜேர்மனியிலும்

இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் நேற்றுப் பகல் டுசில்

டோவ் சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு

அவர்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து நூற்றுக்

கணக்கான தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்

விமான நிலையத்தைச் சூழ்ந்துகொண்டனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த தமி

ழர்கள் பலரின் தொலைபேசிகள் நேற்று மாலையுடன் செயலிழந்திருப்பதாகவும்

தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்கள் சிலர் நாடு கடத்தப்படவுள்ளவர்களை விமான நிலையத்தில்

சந்திக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தபோதிலும், அதற்கான அனுமதி

இறுதி நேரத்தில் மறுக்கப்பட்டது. இதனால், அவர்கள் கடும் ஏமாற்றமடைந்த

வர்களாகக் காணப்பட்டனர்.

டுசில்டோவ் விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு ஜேர்மன் நேரம் 9.30

மணியவில் புறப்படவிருந்த விமானத்தில் சுமார் 100 புகலிடக் கோரிக்கையா

ளர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று இரவு வரை விமான நிலைய சுற்றாடல் தமிழர்களால்

நிறைந்திருந்ததுடன், பதற்றமான நிலையும் காணப்பட்டது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *