வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான நாட்களை 07 ஆக குறைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டு இந்நாட்டிற்கு வரும் இலங்கையர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தைக் கேட்டுள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் 7 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து வெளியே அனுப்பப்படுபவர்கள். மேலும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இரண்டு கோரிக்கைகளும் எதிர்வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும் என நம்புவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் போது வெளிநாட்டிலிருந்துவரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L