தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளின் காரணமாக விவசாயிகளிடம் மேலதிகமாகவுள்ள காய்கறி, பழங்களை மொத்தமாக வாங்கி விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக விற்க முடியாத காய்கறிகள், பழங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க முகவர்களால் மாவட்ட விலைக்குழுவின் விலைகளின் அடிப்படையில் வாங்கப்படவுள்ளன.
இவ்வாறு வாங்கப்படும் காய்கறி, பழ உற்பத்திகள் கொரோனா சிகிச்சை நிலையங்கள், அனைத்து அரச வைத்தியசாலைகள், இராணுவ மற்றும் இடம்பெயர்தோர் முகாம்கள், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இது சம்பந்தமான நடவடிக்கைகளைத் தொடர விவசாய அமைச்சர் முன்வைத்த திட்டத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
——————
Reported by : Sisil.L