போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் வெளியீடு பற்றி சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தின் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் 4 மெலோடி பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இந்தப் படத்தில் அஜித் கம்பீரமான பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக இணையத் தளங்களில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவிவர, பலரும் இதனை மறுத்து வருகின்றனர். எனினும் ஓடிடியில் வலிமை படம் ரிலீஸ் ஆகிறது என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால், இதை ஓடிடி டுவிட்டர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L