யாழ்ப்பாணத்தில் 11 பேரும் மன்னாரில் மூவருமாக வடக்கில் நேற்று மட்டும் 14 பேர்
கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்றுபி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 3 குடும்பங்களை சேர்ந்த6 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இந்த மூன்று வீடுகளி
லும் வர்ணப்பூச்சு வேலைக்காக பளையிலிருந்து ஒருவர் வந்து சென்றுள்ளார்.அவர் மூலமே தொற்று பரவியதாகக் கருதப்படுகின்றது.இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் சாரத்தியப்பயிற்றுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.அத்துடன் சண்டிப்பாய் மருத்துவ அதிகாரி ஒருவர் பிரிவில் ஒருவரும், ஊர்கா
வற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் மூவரும்தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புபட்டவர்களாவர்.
இதேபோன்று, மன்னார் மாவட்டத்திலும் 3 பேர் தொற்றாளர்களாக அடை
யாளம் காணப்பட்டுள்ளனர்.
Reported by : Sisil.L