வடக்கில் நேற்று கொடிகாமம் வியாபாரி உட்பட ஒன்பது பேருக்கு கொவிட்-19 : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவை கள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர் மேலும்தெரிவிக்கையில்,“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடஆய்வுகூடத்தில் 292 பேரின்மாதிரிகள் நேற்றுபி.சி.ஆர்.பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டன. இவர்களில்6பேருக்குத் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.இவர்களில் 5 பேர், நவாலியில் தொற்றாளராகக்

கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். மூவர் ஆசிரியையின் குடும்ப உறுப்

பினர்கள். இருவர் ஆசிரியையுடன் முல்லைத்தீவுக்குச் சென்றுவரும் சக ஆசிரியர்கள் ஆவர்.இதேவேளை, யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 3 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொடிகாமம் பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவ

ருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம்

கலட்டியைச் சேர்ந்தவர்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *