வடக்கில் கொவிட்-19 பரவல் தீவிரம் ;சிவராத்திரி வழிபாடுகளில் பங்கேற்போர் அவதானம்: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வருடாந்த சிவராத்திரி நாள் வழிபாடுகள் இன்று நடைபெறவுள்ளன.ஆனால் கடந்த வாரத்திலிருந்து யாழ்.மாவட்டத்தில் கொவிட் – 19 பரவல் தீவிரமடைந்து வருகின்றது. அதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக

50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் தத்தம் வீடுகளில் தங்கி நின்று

எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபாடுமாறும் கேட்டுக்கொள்

கின்றோம்.மேலும் சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்

யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்து தனியே சமயாசார கிரியை நிகழ்வுகளை மட்டும்

நடத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் மேற்கூறிய கட்டுப்பாட்டுகளுடன் நடைபெறவுள்ள இவ்வருட சிவ

ராத்திரி வழிபாடுகளில் கொவிட் – 19 தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாது

காப்பு நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் அவற்றைக் கண்

காணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது இவ்வேண்டுகோளுக்கு இந்து மத குருமார்கள், இந்து மதத் தலைவர்

கள், கோவில் அறங்காவலர் சபையினர், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பூரண

ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *