ராஜகிரிய விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பலி

ராஜகிரியவில் இன்று அதிகாலை ஒரு வாகனத்தை பொலிஸார் பரிசோதித்துக்கொண்டிருந்த போது வேன் ஒன்று அவர்களை மோதியதில் ஒரு பொலிஸ்காரரும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வெலிக்கடவிலுள்ள ஆயுர்வேத சந்திக்கு அருகிலுள்ள பாராளுமன்றப் பாதையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் அவசர பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிறிய ரக லொறி ஒன்றைப் பரிசோதித்துக்கொண்டிருந்த போது பத்தரமுல்லையிலிருந்து பொரளை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது.

இதன்போது சோதனைக் குழுவின் தலைவராகச்

செயற்பட்ட 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் லொறியின் உதவியாளர் ஆகியோரே கொல்லப்பட்டனர்.

தலவத்துகொடவைச் சேர்ந்த குறித்த சாரதியை வெலிக்கட பொலிஸார் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நாடெங்கும் விபத்துகள் கணிசமானளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, இன்று அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 9 பேர் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *