விபத்தில் படுகாயமடைந்த தாயரும் மகனும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி – வல்வெட்டித்துறை – வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி அவரின் மகனான மோகனதாஸ்
திலீபன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது:
வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த உறவினர்களான ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபாட்டுக்காக காரில் சென்றனர்.
மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் கார் சென்று கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் படுகாயமடைந்த தாயும் மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் தாயார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயார் மறைந்த மறுநாளான நேற்று மகனும் உயிரிழந்தார். இந்நிலையில் காயமடைந்த ஏனையோர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
——————
Reported by : Sisil.L