யாழ். மாவட்டத்தில் நேற்று மாலை வரை 49,280 பேருக்கு தடுப்பூசி: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ். மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை வரை 49 ஆயிரத்து 280 கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ். மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்றன. இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கொ விட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மே 30ஆம் திகதி 2 ஆயிரத்து 947 பேருக்கும் மே 31ஆம் திகதி 6 ஆயிரத்து 123 பேருக் கும் ஜூன் முதலாம் திகதி 13 ஆயிரத்து 822 பேருக்கும் ஜூன் 2ஆம் திகதி 23 ஆயிரத்து 454 பேருக்கும் ஜூன் 3ஆம் திகதியான நேற்று ஆயிரத்து 740 பேருக்கும்மொத்தமாக 48 ஆயிரத்து 86 பேருக்குத் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆயிரத்து 194 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன.

எனவே நேற்று மாலை வரை மொத்தமாக 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.சிலவகை மருந்துகள் ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்
சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை,பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் நாளை சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இவர்களுக்கு வழங்குவதற்காக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமிடத்து ஏனைய கிராம அலுவலகர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றுள்ளது.    
——————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *