யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் அடுத்த வாரம் இரண்டாம் கட்ட பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் வர்த்தக நிலையங்களைத்
திறக்க அனுமதிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஆயிரத்து 440 பேரை பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தியதில் 43 பேருக்கு தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 7 பேரின் மாதிரிகள் முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளன என அறிக்கையிடப்பட்டது.
அவர்கள் 7 பேரிடமும் நேற்று மீளவும் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் நேரடித் தொடர்புடையவர்கள், வர்த்தகர்கள்
மற்றும் பணியாளர்களிடம் இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர்
முன்னெடுக்கப்படும்.
அதன் பின்னர் வர்த்தக நிலையங்களைத் திறப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும்” என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
Reported by : Sisil.L