யாழ். தென்மராட்சிப் பெண் கொரோனாவுக்குப் பலி

தென்மராட்சி நுணாவில் மேற்கு, கல்வயல் கிராமத்தைச் சேர்ந்த பெண்(59 வயது) ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தார். நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த குறித்த பெண்ணுக்கு கடந்த 13 ஆம் திகதி கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அவருடைய உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அதே நாள் கொழும்பு மஹரகம கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டிருந்த நிலையில் அங்கு நேற்று அவர் உயிரிழந்தாரென குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை நேற்றுக் காலை வடமராட்சி,கரவெட்டியைச் சேர்ந்த ஒருவரும்
கொரோனாவால் உயிரிழந்தாரென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *