யாழ்ப்பாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும், மன்னாரில் இருவருக்கும் என வடக்கு மாகாணத்தில்
மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 249 பேரின் மாதிரி கள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன. இதன்போதே 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நால்வருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் இருவர் வெளி நோயாளர் பிரிவிலும், இருவர் நோயாளர் விடுதியிலும் அடையாளம் காணப்பட்டனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேருக்கு கொரோனா தொற்று
கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கொரோனா தொற்றா
ளராக அடையாளம் காணப்பட்டவருடன் நேரடித் தொடர்புள்ளவர்கள். தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள்இருவருக்கும் தாதிய உத்தியோகத்தர்ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று
கண்டறியப்பட்டது. இவர் கொரோனா தொற்றாளருடன் நேரடித்தொடர்புடை
யவர் என சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மன்னார் மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் மருத்துவர்
கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *