யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்கு
களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்றுவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
‘யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ்தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் திரையரங்குகளை மூடவில்லை என்று எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பில்
ஆராயப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்
படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
Reported by : Sisil.L