யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பருத்தித்துறையைசசேர்ந்த 9 வயது மாணவி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 264 பேரின்மாதிரிகள் மீதான பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் எவருக்கும் தொற்று இருக்கவில்லை.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 465 பேரின்
மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்குதொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.மன்னார் வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபெண் ஒருவருக்கு தொற்றுள்ளமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல்
விடுதியில் சேர்க்கப்பட்டு பிசிஆர்பரிசோதனைக்கு
உள்படுத்தப்பட்டார்.அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் யாழ்ப்பாணம் நகரில் வசிப்பவர்.
பருத்தித்துறையில் குடும்பம் ஒன்றில் சிலருக்கு கோரோனா தொற்று ஏற்பட்ட
நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 வயது மாணவிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
REPORTED BY : SIRIL.L