யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 86 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 544 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில்,சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேர்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர்,யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்,மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் என யாழ்.மாவட்டத்தில் 86 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் பரந்தன் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நால்வரும், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும், கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலை யில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
———————-
Reported by : Sisil.L