யாழில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்றுப்புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தை வியாபாரி என்று அவர் குறிப்பிட்டார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும்யாழ்ப்பாணம் மருத்துவ

பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 756 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 321 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவில் 4 பேருக்கு தொற்றுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருநெல்வேலி பொதுச் சந்தை

தொகுதியைச் சேர்ந்தவர். ஏனைய 3பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன்நேரடித் தொடர்புடையவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்றுஉள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள்அனைவரும்சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள். உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குதொற்றுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஒருவர் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரி. ஏனைய ஒருவர் தொற்

றாளருடன் நேரடித் தொடர்புடையவர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 5பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர்தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள். மேலும் இருவர் வெளி

நோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்கள்” என்றும் வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *