யாழ்ப்பாணம் அரசடியில் நேற்று கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசாரம் நடத்தியோர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது மது போதையில் இருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேக நபர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ஜூன் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நீதிமன்றம் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
——————
Reported by : Sisil.L