மொனராகல மாவட்ட பொது வைத்தியசாலையில் 12 பணியாளர்களுக்கு கொவிட்-19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று மருத்துவ அதிகாரிகள், நான்கு தாதிகள், மூன்று சுகாதார உதவியாளர்கள், ஒரு கதிரியக்க நிபுணர் மற்றும் பாதுகாவலர் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சர் தனபால ரத்நாயக்க தெரிவித்தார்.
இதையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
————–
Reported by : Sisil.L