மூங்கிலாறு சிறுமி மரணம் – காரணம் வெளியானது

முல்லைத்தீவு – மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த 15ஆம் திகதி புதன் கிழமை முதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ள வளவு ஒன்றில் கடந்த 18ஆம் திகதி  சடலமாக மீட்கப்பட்டார்.


இதேவேளை சிறுமியின் மரணம் தொடர்பில் சட்ட  மருத்துவ அதிகாரியின் அறிக்கையில்,
 பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *