கல்கிரியாகமவிலுள்ள வீடொன்றில் மீன் தொட்டியில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
ஆன்டியாகல பிரதேசத்திலுள்ள வீட்டின் உட்புறமாகக் கட்டப்பட்ட மீன் தொட்டியிலேயே குழந்தை விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் ஆண்டியாகல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.